தசாவதாரத்தின் வசூல் புதிய உயரங்களைத் தொட்டுள்ளது. ஜூன் 29 வரை மட்டும், தசாவதாரத்தின் அமெரிக்க வசூல் ரூ. 65 கோடி (சந்தேகம் இருப்பவர்கள் http://www.boxofficemojo.com/intl/weekend/?yr=2008&wk=26&p=.htm-ஐ பார்த்துக் கொள்ளவும்). சிவாஜியின் மொத்த அமெரிக்க வசூல் ரூ. 25 கோடி. இது வரை தசாவதாரம் சிவாஜி-ஐ விட ஏறக்குறைய இரண்டரை மடங்கு அதிகமாக சம்பாதித்துள்ளது. மற்ற box office-களிலும் பெரிதாக வேறுபாடு இருக்காது என்றே நம்புகின்றேன். நிற்க.
பொதுவாக ஊடகங்கள் குசேலன் வசூலில் தசாவதாரத்தை விஞ்சிவிடும் என்ற ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளன. எனக்கு என்னவோ இது வழக்கமாக ரஜினி படங்கள் கமல் படங்களை வசூலில் வெற்றி கொள்வதை மனதிற் கொள்ளப்பட்டு வடிவம் கொடுக்கப்பட்ட செய்தியாகத் தெரிகின்றது. தசாவதாரத்தின் வசூல் ஆஸ்கார் இரவிச்சந்திரன் சொல்வது போலவும், மேற்கண்ட ரெக்கார்டுகள் சொல்வது போலவும் ரூ. 200 முதல் ரூ. 300 கோடி வரை இருக்க வாய்ப்புகள் உள்ளன. இது தமிழ் படங்களின் புதிய வணிக உத்திகளும், கமலின் மற்ற மொழி (தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி) இரசிகர்களும் தந்த வெற்றி. இந்த படத்தின் மூலம் கமல் தன்னால் சம்பாதிக்க முடியும் அதிக பட்ச வசூலைப் பெற்றிருப்பதாகத் தோன்றுகிறது (இன்னும் கொஞ்சம் technical-ஆக நன்றாக இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் மற்ற மொழி இரசிகர்களையும் இழுத்திருக்க முடியும்).
இனி வரும் கமல் படங்கள் தசாவதாரத்தை விடப் பெரிதாக மாறுபட்ட வசூலைத் தர வாய்ப்பில்லை என்றே நினைக்கின்றேன். அது போலவே ரஜினி படங்களும் சிவாஜி-ஐ விடப் பெரிதாக வசூலிக்க வாய்ப்பில்லை. ரஜினியின் ரோபோ வேண்டுமானால் சிவாஜி-ஐ விட சற்று அதிகமாக வசூல் செய்ய வாய்ப்பு இருக்கிறது. குசேலன் ரஜினி படமே இல்லை - பசுபதி படம். தமிழ் நாட்டில் ரஜினி சொன்ன மாதிரி அவருடைய 25%-க்காக சிவாஜியின் 100% வசூல் கிடைத்தாலும், மற்ற இடங்களில் ரஜினி கௌரவத் தோற்றமாகவேக் கருதப்படுவார். இன்றைய தமிழ் சினிமா வணிகம் தமிழ் நாடு / இந்தியா அல்லாத box-office-களையும் நம்பி இருப்பதால் குசேலன் சிவாஜியின் உயரங்களைத் தொடுவதே கடினம் என நினைக்கின்றேன். நிற்க-2.
தசாவதாரம் கமலின் உயரமாகவும் சிவாஜி ரஜினியின் உயரமாகவும் உள்ள நிலையில் புதிதாக ஏதேனும் வணிக உத்திகள் இல்லாவிடின், கமல் ரஜினியை விட உயரமாகவேத் தோன்றுகிறது. கமலால் மர்ம யோகியையும் இன்னொரு தசாவதாரமாக மாற்றமுடிந்தால் தசாவதாரம் தொடங்கி வைத்துள்ள அடுத்த கட்ட கமல்-ரஜினி வசூல் போட்டியில், ரஜினி சிவாஜி வரை கொண்டிருந்த முதலிடம் தொடருமா என்பது சந்தேகமே.
iTheme Techno Blogger by Black Quanta. Theme & Icons by N.Design Studio. Distributed by eBlog Templates
05 July 2008 11:23
that shows the inflation.
05 July 2008 11:40
//that shows the inflation.//
If you adjust for 3.9% inflation in US in 2007, there is not a huge difference - it is Rs. 26 crores.
05 July 2008 13:28
yeah, u r right..it is because of the new things introduced in Dasavathram for the Audience the movie is reaching heights !
Robo or Marmayogi could beat the record..Kuselan has no possibilities !
05 July 2008 14:26
நன்றி விஜி!
05 July 2008 17:10
இந்த புள்ளிவிவரம் சரியா? ஏனென்றால் அமெரிக்க வசூல் 14 மில்லியன் டாலர் என்கிறது நீங்கள் கொடுத்துள்ள லிங்க். ஒரு டிக்கெட் விலை 10 முதல் 20 டாலர் மட்டுமே. சராசரியாக 14 அல்லது 15 டாலர் என்றாலும் 1 மில்லியன் பேர் இந்த படத்தைப் பார்த்திருக்கிறார்களா?
10 லட்சம் பேர் அமெரிக்காவில் மட்டும் இந்த படத்தைப் பார்த்திருப்பார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என் கணக்கு தவறென்றால் விளக்கவும்.
05 July 2008 17:23
குசேலன் படப்பாடல்கள் மிகவும் சொதப்பல். பாடல்கள் தான் பெரும்பாலும் ஒரு படத்தின் ரிப்பீட் ஓடியன்சை நிர்ணயிப்பது. குசேலன் சிவாஜி போல் வசூல் கொடுக்காது.
05 July 2008 17:23
ரொம்ப அமெரிக்காவை வைத்து ஜால்லியடிக்காதீர்கள். உள்ளூரில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்.
சத்தியம் சாந்தமில் நாற்பது தினங்கள் நான்கு காட்சிகளாக ஓடியது சிவாஜி. மூன்று வாரங்களிலே சாந்தமில் மூன்று காட்சியாக குறைக்கப்ப்ட்டுவிட்டது தசாவதாரம்.
அபிராமியில் மூன்று தியேட்டரில் ஓடியது சிவாஜி. தற்போது தசா இரு தியேட்டர்கள்தான்.
சிவாஜி விநியோகஸ்தர்களால் வாங்கி விநியாகப்பட்ட படம். தசா நேரடி ரீலீஸ். இதனால்தான் ஆஸ்கரும், பிரமிட் சமீராவும் கதைகளை அள்ளி விடுகிறார்கள்.
தசா பெரிய வசூலிட்ட 75 நாட்கள் தொடர்ச்சியாக ஓட வேண்டும். சிவாஜி நூறு நாடகள் தாங்கி ஓடியது. தசா தாங்குமா? பொறுத்து பார்த்து அப்புறம் முடிவு செய்யுங்கள். சிவாஜி 25 கோடி வசூலித்தது என்பதற்கான ஆதாரம் என்ன?
அருப்புக்கோட்டையில் 50 நாட்கள் இரு தியேட்டரில் ஓடிய படம் சிவாஜி. தசா அதற்குள்ளேயே ஒரு தியேட்டர். நிலைமை இப்படி இருக்க அதற்குள்ளேயே ஆட்டம் போட வேண்டாம்.
வசூல் மன்னன் என்றும் ரஜினியே.
முதலில் ஆஸ்கர் அனைவருக்கும் சம்பள பாக்கியை கொடுக்கட்டும். சிவாஜியில் பணிபுரிந்தவர்களுக்கு 25,000 போனஸ் கொடுத்தது ஏவிஎம்.
குசேலனை பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம்
05 July 2008 18:19
கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
வெண்பூ (அழகான பெயர்) - boxofficemojo.com ஒரு தரமான வெப்சைட் என்றே நம்புகின்றேன். மாற்றுக் கருத்துகள் இருப்பின் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளவும். பெரும்பாலும் தமிழர்கள் மற்றும் பார்த்த சிவாஜி 25 கோடி எனும்போது, அமேரிக்காவில் பரவலாக உள்ள தெலுங்கு நண்பர்களும் (கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியும் இதில் அடக்கம்) தசாவதாரத்தைப் பார்த்தபோது 65 கோடி என்னை ஆச்சரியப் படுத்தவில்லை.
ராஜ்குமார் - சிவாஜி 25 கோடி என்பதும் அதே வெப்சைட்டின் மூலமாகத் தான் அறிந்தேன் (சிஃபி வழியாக ஒரு லிங்க்). நான் தனியே தேடியபோது கிடைக்கவில்லை. கிடைத்தால் தருகின்றேன்.
மற்றபடி உள்நாட்டு சந்தை நிலவரம் நீங்கள் தருவதுதான் எனக்கு தகவல். ஆனால் 75 நாட்கள் கூட ஓடாது என நான் நினைக்கவில்லை. ஆனால் அமெரிக்காவை sampling செய்ய விரும்பாத நீங்கள் அருப்புகோட்டையை sampling செய்வது வியப்பாக இருக்கிறது.
05 July 2008 22:45
Kamal ulakanayagan
Rajani ullur nayagan
do not compare each other.
06 July 2008 04:42
\\சத்தியம் சாந்தமில் நாற்பது தினங்கள் நான்கு காட்சிகளாக ஓடியது சிவாஜி. மூன்று வாரங்களிலே சாந்தமில் மூன்று காட்சியாக குறைக்கப்ப்ட்டுவிட்டது தசாவதாரம்\\
தசா சென்னையில் சிவாஜியை விட அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டதும் இதற்கு காரணம்
\\அபிராமியில் மூன்று தியேட்டரில் ஓடியது சிவாஜி. தற்போது தசா இரு தியேட்டர்கள்தான்\\
உங்கள் வாதப்படி பார்த்தால் இது அபிராமி ராமநாதன் ரிலீஸ்
ரஜினிக்கு இருக்கும் மாஸ் கமலுக்கு தமிழ்நாட்டில் இல்லை. ஆனால் ஆந்திரா,கேரளா, கர்னாடகா இவை எல்லாம் சேர்ந்தது தான் கமலின் டொமைன்.
06 July 2008 09:30
நன்றி, முரளிகண்ணன். நீங்கள் சொல்வது உண்மை. அதிக தியேட்டர்களில் நிறைய ஷோக்கள் என்பது புதிய வணிக உத்திகளில் ஒன்று. 100 நாட்கள் எல்லாம் இப்போது தேவையே இல்லை - முதல் வாரத்திலேயே போட்ட காசை எடுக்கும்போது.
08 July 2008 11:49
http://thatstamil.oneindia.in/movies/specials/2008/01/shivaji-distributors-turn-against-avm-090108.html
intha website pathu therinthu kolavum shivaji evlavu odiyathendru vendumanal melum tharugiren.kuruvi kooda 50 natkal ela theatre ilum pdukirathu ungaluku theriyuma 50% panam thirumba koduka producer udayanidhi opukondirupathu.collection patri arivilai endral moodi kondirungal rajkumar.apuram venpu athu america vasool alla india thavira,pira nadugal
08 July 2008 12:57
ஆரம்பிச்சிட்டீங்களா?
08 July 2008 14:12
//தசாவதாரத்தின் வசூல் புதிய உயரங்களைத் தொட்டுள்ளது. ஜூன் 29 வரை மட்டும், தசாவதாரத்தின் அமெரிக்க வசூல் ரூ. 65 கோடி (சந்தேகம் இருப்பவர்கள் http://www.boxofficemojo.com/intl/weekend/?yr=2008&wk=26&p=.htm-ஐ பார்த்துக் கொள்ளவும்). சிவாஜியின் மொத்த அமெரிக்க வசூல் ரூ. 25 கோடி. //
அட சும்மா இருங்க சார் நீங்க வேற. ஏற்கனவே உள்ள செய்திகளுக்கே சென்னைல ஜெலுசில் தட்டுப்பாடு வந்திருச்சி