Saturday, June 28, 2008

அழகு

எனக்கு முன்பே
இரு இருக்கைகள் தள்ளி
ஒரு இளம்பெண்.

இலேசாக வாரிய சிகையலங்காரம்
எளிமையான காதணிகள்
சராசரியான மேலாடை.

முகத்தைப் பார்க்கவில்லை என்றாலும் கூட
அழகாகத்தான் இருக்க வேண்டும்.

ஒரே ஒரு கவலை -
எனது நிறுத்தத்துக்கு முன்பே
இறங்கி விட கூடாது.

1 comment:

MSK / Saravana said...

//முகத்தைப் பார்க்கவில்லை என்றாலும் கூட
அழகாகத்தான் இருக்க வேண்டும்.//

:)))