நள்ளிரவு நேரமாதலால் கவனிக்கவில்லை -
நசுங்கிய சத்தம் மட்டுமே கேட்டுக் குனிந்தேன்.
முதலில் பதட்டம்,
பின்னர் கவனித்து நோக்கியதில் தெளிந்தேன்.
கடைசியில் கோபம் - ஏன் வந்து என் காலில்
மிதி பட்டாய் என்று?
இப்படி சில நத்தைக் கூடுகள அவ்வப்போது.
ரோட்டோரங்களில், பள்ளிக்கூடங்களில்,
திருவிழாக்கூட்டங்களில் மற்றும் பல இடங்களில்.
நானும் உங்களைப் போலவே
நசுங்கிய நத்தைகளையும் குற்ற உணர்வையும்
தள்ளிவிட்டுத் தொடர்ந்து பயணிக்கிறேன்.
நத்தைகளையும் மிதித்தவர்களையும் திட்டியபடியே -
கொஞ்சம் கூட உறுத்தலிலில்லாமற்!
14 comments:
//நானும் உங்களைப் போலவே
நசுங்கிய நத்தைகளையும் குற்ற உணர்வையும்
தள்ளிவிட்டுத் தொடர்ந்து பயணிக்கிறேன்.//
நல்ல கவிதை.. அருமை..
நல்லா இருந்தது, கொஞ்சம் புரிந்தது
நன்றி சரவணகுமார் மற்றும் குடுகுடுப்பை.
அட, எனக்கு கூட புரியுதே! ஒரே நாள்ல நான் அறிவாளி ஆகிட்டன் போலருக்கு :0)
யாரும் எழுதாத விஷயத்தை ரொம்ப வித்தியாசமா எழுதிறீங்க. ரொம்ப நல்லாருக்கு.
(ஆனா, எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காத உயிரினம் நத்தை. பாத்தா மொதல்ல நசுக்கிட்டு தான் வேற வேலை!)
ஹலோ சரவணா! நேத்து நான் நீங்க 'நத்தைக் கூடுகள்' கவிதைக்கு மட்டும்தான் பின்னூட்டம் போட்டு இருந்தீங்கன்னு நெனைச்சேன் (பொதுவா நம்ம கவிதைக்கெல்லாம் யாரும் பின்னோட்டம் போடறது இல்லையா?). அப்புறம் பார்த்த எல்லாக் கவிதைகளிலும் இருக்கு; மற்றும் உங்கள் blog-ல் வேறு லிங்க் கொடுத்துள்ளீர்கள்.
உங்கள் உற்சாகப் படுத்துதலுக்கு மிக்க நன்றி!
ஒவ்வொரு கவிதையிலும் போய் நன்றி சொன்னால் கொஞ்சம் வெளம்பரம் மாதிரி இருக்கும். அதனால, உங்களது அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் என்னுடைய நன்றிகள்!
//அது சரி: ஆனா, எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காத உயிரினம் நத்தை. பாத்தா மொதல்ல நசுக்கிட்டு தான் வேற வேலை!//
ஹலோ அது சரி! இதெல்லாம் ஆவறதில்லை.
உங்களோட blog-லும் லிங்க் பார்த்தேன் - நன்றிகள்.
நல்ல கவிதைகள் மீது மிக மிக ஆர்வம் அதிகம் எனக்கு.. அதுதான் காரணம்..
தொடர்ந்து எழுதுங்க.. வாழ்த்துக்கள்..
:))
நத்தை சாப்பிட சுவையா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். என்ன சாபிடலாமா?
//குடுகுடுப்பை: நத்தை சாப்பிட சுவையா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். என்ன சாபிடலாமா?//
அடப் பாவிகளா, ஒருத்தன் சீரியஸா கவிதை எழுதினா அதை வச்சு காமடி பண்ணுறீங்களே?
//
செல்வ கருப்பையா
13 September 2008 20:01
//குடுகுடுப்பை: நத்தை சாப்பிட சுவையா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். என்ன சாபிடலாமா?//
அடப் பாவிகளா, ஒருத்தன் சீரியஸா கவிதை எழுதினா அதை வச்சு காமடி பண்ணுறீங்களே?
//
செல்வா சார், இதெல்லாம் ரொம்ப லேட்டு. சீரியஸானது நீங்களா இல்ல அந்த கூடு ஒடஞ்ச நத்தையா?
nasungiya nathaikul iruntha eram en manathirkul adithathu
nandri bala
நன்றி பாலா!
very very Painful Poem. sir. I love it
நன்றி தமிழ்நெஞ்சம்!
Post a Comment