Saturday, September 13, 2008

மொழி பெயர்ப்பு

எனக்குப் புரிகிறது -
அந்தக் கருவிழிகளின் அசைவிலும்,
புருவங்களின் நெரிப்பிலும்,
இதழ்களின் விரிப்பிலும்
உள்ள தயக்கங்களின் மொழிகள்!

இனி நான் உனக்கான
கனாக்களை காண்பதில்லை.
என் பேனாவை எறிந்துவிட்டேன் -
உனக்கான கவிதைகளை வேறு யாரோ
எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்னொரு முறை
சந்திக்க நேரிடும் போதும் பேசிவிடாதே -
காதல் என்பது காதலிப்பதில்
மட்டும் இல்லை!
இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் -
இதுவும் பரவசமாய்த் தான் இருக்கிறது!

10 comments:

MSK / Saravana said...

//என் பேனாவை எறிந்துவிட்டேன் -
உனக்கான கவிதைகளை வேறு யாரோ
எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.//

மிக மிக அருமை..

MSK / Saravana said...

ஏதேதோ நினைவுகளை கிளறிவிடுகிறது..

செல்வ கருப்பையா said...

நன்றி சரவணா!

//ஏதேதோ நினைவுகளை கிளறிவிடுகிறது..//

ம்ஹும்... உங்கள் கவிதைகளை முழுதும் இன்னும் முடிக்கவில்லை. ஏதேனும் கதை கிடைக்கிறதா எனப் பார்கிறேன்.

அது சரி said...

வர வர உங்க கவிதையெல்லாம் எனக்கே புரிய ஆரம்பிச்சிடுச்சே :0)

செல்வ கருப்பையா said...

//வர வர உங்க கவிதையெல்லாம் எனக்கே புரிய ஆரம்பிச்சிடுச்சே :0)//
ஐயய்யோ... அப்ப நான் ஒழுங்கா கவிதை எழுதறது இல்லையா?

குடுகுடுப்பை said...

நீங்க மொழிகளை புரிந்து கொள்ளுங்கள்,
நான் உங்களுடைய கவிதையை புரிந்து கொள்கிறேன்

Anonymous said...

எல்லாம் அருமை ...

Kajen said...

மிக மிக அருமை.. மிக மிக அருமை..

செல்வ கருப்பையா said...

நன்றி அனானி மற்றும் Kajen!

Tech Shankar said...

உங்கள் ப்ளாக் டெம்ப்ளேட் அருமை.
கவிதை அதைவிட அருமை.