Wednesday, October 01, 2008

A Poison Tree

வெளிப் படுத்த
முடியாத கோபம்,
இயலாமையின்
எரிச்சல்.
என்ன முயற்சித்துப்
பார்த்தாலும்
இயல்பாய்
இருக்க முடியவில்லை.

என்னிடம் துளிர்க்க
ஆரம்பித்திருக்கும்
அந்த நச்சு ஆப்பிள் கடித்து
ஒருவர் இறப்பதற்குள்,
யாராவது என்னிடம்
தப்பு செய்து மாட்டிக் கொள்ளுங்களேன்!

21 comments:

MSK / Saravana said...

ஜுப்பரப்பு..

MSK / Saravana said...

இதே மாதிரியான ஒரு கவிதையை எழுதும் நிலையில் நானும் இருக்கிறேன்..
:))

MSK / Saravana said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க..
:))

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு கருப்பையாணே, எனக்கு தினமும் யாராவது மாட்டிக்கனும் போல இருக்கு. நிரம்ப நிதானம் இழந்து தவிக்கிறேன். ஒருவேளை எனக்கு நச்சு ஆப்பில் இந்த அமெரிக்க வாழ்க்கையோன்னு தொனுது

நசரேயன் said...

அசலும் அசல் சார்ந்த நகலும் நல்லா இருக்கு

குடுகுடுப்பை said...

//அசலும் அசல் சார்ந்த நகலும் நல்லா இருக்கு//

பொதுவா கவிதை தான் புரியாதுன்னு நெனச்சேன், இங்க பின்னூட்டமும் புரியலப்பா

அது சரி said...

செம காண்டுல இருக்கேன், மாட்ன மவனே செத்த!... இதை இப்பிடி கவிதையா கூட சொல்லலாமா? கவிஞர்களுக்கு கடுப்பு வந்தால் கலம்பகம் பாடுவார்கள். இப்ப‌ உங்க‌ளுக்கு யார் மேல‌ என்ன‌ க‌டுப்பு? இதுக்குத்த்தான் என்னோட‌ ப‌திவெல்லாம் ப‌டிக்காதீங்க‌ன்னு சொன்னேன். கேட்டா தான‌?

க‌விதை சூப்ப‌ர். இந்த‌ மாச‌ கோட்டா முடிஞ்சி போச்சின்னு இதோட‌ நிறுத்திராதீங்க‌!

செல்வ கருப்பையா said...

நன்றி சரவணா, குடுகுடுப்பை, நசரேயன் மற்றும் அது சரி!

//குடுகுடுப்பை: பொதுவா கவிதை தான் புரியாதுன்னு நெனச்சேன், இங்க பின்னூட்டமும் புரியலப்பா//

அட, ஆமாமில்ல...

//அது சரி: செம காண்டுல இருக்கேன், மாட்ன மவனே செத்த!.//

அதே... அதே தான்! ரெண்டு நாளா இந்த பஸ் நம்பர் ஒண்ணும், எடின்பராவும் என்னை செம காண்டு ஏத்திகிட்டு இருக்காங்க... செம கடுப்பாயிடுச்சு... யாருகிட்ட கோபத்த காண்பிக்கறதுன்னு தெரியல... நாம என்ன பண்ணுறது... இந்த மாதிரியாவது கோபத்தை கொறைக்கலாமுன்னுதான் பாக்கறேன். உங்க பதிவு முத்து தல!

செல்வ கருப்பையா said...

//சரவணா: இதே மாதிரியான ஒரு கவிதையை எழுதும் நிலையில் நானும் இருக்கிறேன்..//

எழுதுங்க சரவணா... நீங்க எழுதுனா இன்னும் நல்லா எழுதுவீங்க...

செல்வ கருப்பையா said...

//குடுகுடுப்பை: நிரம்ப நிதானம் இழந்து தவிக்கிறேன். ஒருவேளை எனக்கு நச்சு ஆப்பில் இந்த அமெரிக்க வாழ்க்கையோன்னு தொனுது//
இந்தியா வந்தாலும் அதுதான் தோணும் - இக்கரைக்கு அக்கரைப் பச்சை.

அது சரி said...

//
செல்வ கருப்பையா

அதே... அதே தான்! ரெண்டு நாளா இந்த பஸ் நம்பர் ஒண்ணும், எடின்பராவும் என்னை செம காண்டு ஏத்திகிட்டு இருக்காங்க... செம கடுப்பாயிடுச்சு... யாருகிட்ட கோபத்த காண்பிக்கறதுன்னு தெரியல... நாம என்ன பண்ணுறது... இந்த மாதிரியாவது கோபத்தை கொறைக்கலாமுன்னுதான் பாக்கறேன்.
//

இப்ப‌வே இப்பிடியா? இந்தா இப்ப‌ டிச‌ம்ப‌ர் வ‌ர‌ப்போவுதில்ல‌.... குளுரு பின்னி பெட‌லெடுக்குமில்லா?

ஒரு ஃபுல் பாட்டில் வோட்கா வாங்கிட்டு செட்டிலாவுங்க‌ சாமி!

( நாந்தான் கொலை வெறில இருக்கேன்னா, நம்ம நண்பர்களும் அப்பிடி தானா?)

நசரேயன் said...

/*
//அசலும் அசல் சார்ந்த நகலும் நல்லா இருக்கு//

பொதுவா கவிதை தான் புரியாதுன்னு நெனச்சேன், இங்க பின்னூட்டமும் புரியலப்பா
*/

ஒரிஜினல் A Poison Tree யை எழுதினது William Blake
அதிலேயும் கோபத்தை பத்தி நல்லா எழுதி இருப்பாரு, அந்த தலைப்பில் செல்வ கருப்பையா யாவும் கோபத்தை பத்தி நல்லா எழுதி இருக்காருன்னு ஒரு வரியிலே சொல்ல வந்தேன் :)

குடுகுடுப்பை said...

ஒரிஜினல் A Poison Tree யை எழுதினது William Blake
அதிலேயும் கோபத்தை பத்தி நல்லா எழுதி இருப்பாரு, அந்த தலைப்பில் செல்வ கருப்பையா யாவும் கோபத்தை பத்தி நல்லா எழுதி இருக்காருன்னு ஒரு வரியிலே சொல்ல வந்தேன் :)
/
யப்பாடி நீங்க இவலோ பெரிய படிப்பாளியா.

செல்வ கருப்பையா said...

//அதுசரி: ஒரு ஃபுல் பாட்டில் வோட்கா வாங்கிட்டு செட்டிலாவுங்க‌ சாமி! //
தங்கமணி சாமியாடிடுவா!

//அதுசரி: (நாந்தான் கொலை வெறில இருக்கேன்னா, நம்ம நண்பர்களும் அப்பிடி தானா?)//
இனம் இனத்தோட சேருது.

செல்வ கருப்பையா said...

//ஒரிஜினல் A Poison Tree யை எழுதினது William Blake //
சரியாச் சொன்னீங்க நசரேயன்! William Blake-ன் இந்தக் கவிதை ரொம்ப அற்புதமானது. அடிக்கடி கோபம் வரும்போதெல்லாம் நினைவுக்கு வருவது.

MSK / Saravana said...

என்ன நண்பரே.. வெகு நாட்களாய் ஆளையே காணோம்..!!!????

MSK / Saravana said...

என்ன நண்பரே.. வெகு நாட்களாய் ஆளையே காணோம்..!!!????

அன்புடன் அருணா said...

ஏனிந்தக் கொலை வெறி?
அன்புடன் அருணா

MSK / Saravana said...

ஊர்லையே இல்லீங்களா நீங்க..

MSK / Saravana said...

வெகு நாட்களாய் ஆளையே காணோம்..!!!????

KarthigaVasudevan said...

//என்ன முயற்சித்துப்
பார்த்தாலும்
இயல்பாய்
இருக்க முடியவில்லை//

"பாய்சன்" சாப்பிட்ட அவஸ்தைல எழுதின எபெக்ட் ...அப்படியே பிரதிபலிக்குதே கவிதைல ...என்ன கஷ்டம் ??? ஆனாலும் கவிதை நல்லா இருக்கு வாசிக்க.