Monday, May 10, 2010

எட்டாமவள்

தன் இடுங்கிய கண்களால்
என் ஈரக்குலை வேறாகப் பார்த்தாள்
முதலாமவள்.
நான் பார்ப்பது
ஏனென்று அறிந்ததும்
தன்னை மறைத்துக் கொண்டாள்.

இரண்டாமவள்
உன்னைப் போலவே
கொஞ்சம் கருப்பு.

மூன்றாமாவள்
உன்னை விட இனிமை.

அடுததவள் என்னை
ஏறெடுத்தும் நோக்கவில்லை.
அதனாலும் தெரிந்தது
அவள் எப்படி என்று!

இப்படியாகப் பார்த்தேன்
உன்னைப் போலிருந்த அந்த எழுவரை -
உன்னைப் போல ஒருவரும் இலர்!

2 comments:

VELU.G said...

நல்ல கவிதை

தொடர்ந்து எழுதவும்

செல்வ கருப்பையா said...

நன்றிகள் வேலு!