Saturday, June 28, 2008

நாளை முதல் நட்பு

பக்கத்து இருக்கையில்
எப்போதும் உட்காருதல்,
தோளோடு சாய்ந்து
காதோடு கிசுகிசுத்தல்,
என் சட்டைப்பை பேனாவை
என்னை கேட்காது எடுத்தல்,
நான் வரும் முன்னே வரும்
பேருந்துகளை தவிர்த்தல்

ஆக பல இன்னபிறவற்றையும்
எங்களூரில் காதல் என்பர்!

எனக்கும் அதுவும்
அது அல்லாத சிலதும்தான்
பழக்கமானது!

நீ நினைக்கின்றபடி
நட்பு வேண்டுமெனில்
குறைந்த பட்சம்
நாளைமுதல் நீ
முழுக்காற் சட்டையும்
கழுத்து மட்டும் தெரியும்
முழுக்கைச் சட்டையும்
அணியப் பழகு.

1 comment:

MSK / Saravana said...

//ஆக பல இன்னபிறவற்றையும்
எங்களூரில் காதல் என்பர்!//

//நீ நினைக்கின்றபடி
நட்பு வேண்டுமெனில்//

பின்றீங்க.. அருமையான கவிதை..