Saturday, July 19, 2008

கல்லறைத் தோட்டம்

என் ஜன்னலுக்கு வெளியே
ஒரு கல்லறைத் தோட்டமும்
சில கல்லறைகளும்!

வரிசையாய்
வசதிக்கேற்ற வேலைப்பாடுகளுடன்
இறப்பிலும் ஒழுங்கை
மீறாத நடுகற்கள் மௌனமாக!

வசந்தகாலம் இறக்க
நாட்களிருப்பதனால்
இன்னமும் பசும்பச்சையை
இழக்காத மரங்கள்!

மறக்க முடியாத தன்
துணையை நினைத்துக் கொண்டு
ஒரு முதியவர்!

வருடம் முழுதும் இரங்கல்
பாடும் மழை அன்று
மெதுவாகத் தூறிக் கொண்டிருந்தது!

வேறென்ன வேண்டும் - நம்
சம்பந்தமுடையவர் எவரும்
அங்கிலாது போது
ஒரு கல்லறையை ரசிப்பதற்கு!

4 comments:

MSK / Saravana said...

//வேறென்ன வேண்டும் - நம்
சம்பந்தமுடையவர் எவரும்
அங்கிலாது போது
ஒரு கல்லறையை ரசிப்பதற்கு!//

அட.அட..அட.. சூப்பரப்பு..
:))

குடுகுடுப்பை said...

இன்னக்கிதான் படிச்சேன்.எனக்கும் கவிதையை ரசிக்க பிடிக்குது.

ஒன்னும் மட்டும் புரியல புடிச்சவன் செத்து கெடக்கும் போது இரங்கள் கவிதை எழுத வருமா?

RATHNESH said...

நல்ல எளிய கவிதைக்குரிய லட்சணங்கள் நிரம்பி உள்ளன.

செல்வ கருப்பையா said...

//இன்னக்கிதான் படிச்சேன்.எனக்கும் கவிதையை ரசிக்க பிடிக்குது.//
கதையை மட்டும் படிச்சுட்டு நான் எழுதறது புரியலைங்கறது?

//ஒன்னும் மட்டும் புரியல புடிச்சவன் செத்து கெடக்கும் போது இரங்கள் கவிதை எழுத வருமா?//
அரசியல்வாதிகளுக்கு மட்டும் வரும்.

//நல்ல எளிய கவிதைக்குரிய லட்சணங்கள் நிரம்பி உள்ளன.//
நன்றி rathnesh!