"இந்த காஃபி குடிப்பதே பூர்ஷ்வாத்தனம்...", என்றான்.
அடுத்த மிடறு காப்பி விழுங்கப்போய் நிறுத்திக்கொண்டேன்.
பக்கத்து டேபிளில் சத்தங்கள் குறைந்து எங்களை நோக்கித்திரும்பிவிட்டுத் தொடர்ந்தார்கள்.
"பூர்ஷ்வாத்தனம் என்றால் என்ன?"
"உனது காஃபிதான்..."
நல்லபடியாகக் கூறவில்லை என்பது மட்டும் புரிந்தது.
"ஆனால், எனக்கு காஃபி பிடிக்குமே..."
"உனக்கு பிடிக்க வைக்கப்பட்டிருக்கிறது... காஃபி, வெள்ளை, சப்பாத்தி,..."
அடுத்த வாய் குடிக்கலாமா வேண்டாமா தெரியவில்லை.
"நீ மட்டுமல்ல... சந்திர போஸ், நாக. அழகப்பன், எல்லோருமே பூர்ஷ்வாக்கள்தாம்", பிரகடனம் செய்தான்.
காஃபி டேயில் பூர்ஷ்வா என தனி மெனு இருந்திருக்கக் கூடாதா?
டிப் டீ பூர்ஷ்வாத்தனம் இல்லையா எனக் கேட்க தைரியமில்லை.
அடுத்த முறை அதே டேபிளில் அழகப்பனிடம், அவன் ஒத்துக்க கொள்ள மாட்டான் என்பதால் இவ்வாறு சொன்னேன் "இந்த காஃபி பூர்ஷ்வா தெரியுமா உனக்கு?".

No comments:
Post a Comment