பத்து வயதுக்கு மேல் இருக்காது.
பாதி சீட்டில்தான் அமர்ந்திருந்தாள்.
வழியனுப்ப வாடகை சைக்கிளில் வந்திருந்த
அம்மா ஏதோ விஷயங்கள் சொல்லிக்கொண்டிருக்க
வெறுமையாகத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள்.
"பேரென்னமா?", "ஆனந்தி".
ஆனந்தி பூந்தமல்லிக்குப் பக்கத்தில்
வீட்டு வேலைக்குப் போகிறாளாமாம்.
"இன்னிக்குக் கூடவா?".
"பூஜையாக்கண்டி நெறைய வேலை இருக்காம்".
வழி நெடுக ஒன்றுமே பேசவில்லை.
வேடிக்கைகூடப் பார்க்கவில்லை.
ஷேர் ஆட்டோ ஒன்றில் ஏறிக்கொண்டாள்.
பேருந்திறங்கி மகளுக்கு
சாக்கலேட் வாங்கும்போது தோன்றியது.
என்ன வேலை செய்து விடுவாள் ஆனந்தி.
சரஸ்வதி பூஜைக்கு
புத்தகங்களுக்குப்
போட்டு வைத்துக் கொண்டிருப்பாளாக்கும்.
பாதி சீட்டில்தான் அமர்ந்திருந்தாள்.
வழியனுப்ப வாடகை சைக்கிளில் வந்திருந்த
அம்மா ஏதோ விஷயங்கள் சொல்லிக்கொண்டிருக்க
வெறுமையாகத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள்.
"பேரென்னமா?", "ஆனந்தி".
ஆனந்தி பூந்தமல்லிக்குப் பக்கத்தில்
வீட்டு வேலைக்குப் போகிறாளாமாம்.
"இன்னிக்குக் கூடவா?".
"பூஜையாக்கண்டி நெறைய வேலை இருக்காம்".
வழி நெடுக ஒன்றுமே பேசவில்லை.
வேடிக்கைகூடப் பார்க்கவில்லை.
ஷேர் ஆட்டோ ஒன்றில் ஏறிக்கொண்டாள்.
பேருந்திறங்கி மகளுக்கு
சாக்கலேட் வாங்கும்போது தோன்றியது.
என்ன வேலை செய்து விடுவாள் ஆனந்தி.
சரஸ்வதி பூஜைக்கு
புத்தகங்களுக்குப்
போட்டு வைத்துக் கொண்டிருப்பாளாக்கும்.
No comments:
Post a Comment