வலியறிந்தவன் நீ,
உன் முகத்தில் எஞ்சியிருந்தது
கேள்வி மட்டுமேயென்று
எனக்கும் நளினிக்கும் தெரியும்.
கேள்வியுடன் மரணிப்பது,
வலியைக் காட்டிலும்
கொடுமையானதெனத் தெரிந்தாலும்
உன்னுடன் நேரெதிர் பேசிச் சமர் செய்ய
எனக்கு வலுவில்லை.
என் பக்கம் நியாயமுமில்லை.
வேறேதும் ஏற்பாடுகளுமில்லை.
வேறு வழியில்லாமல்தான்
பொருதத் துணிந்தேன்.
மன்னித்து விடு,
ஏழு முறைகள் பயிற்சி செய்தும்
எனக்கு மூன்று தோட்டாக்கள் தேவைப்பட்டன.
No comments:
Post a Comment