Saturday, January 25, 2020

அம்பறாத்தூணி

மாப்பிள்ளைக்கு பதினாறாம் நாள்.
செம்புந்தண்ணி வைத்துப் படையல்.
பூரணி தெளிந்திருந்தாலென்று
நினைக்கிறேன்.
அவள் வயசான சடங்கிற்குப் பிறகு
இருவரும் பெரிதாகப் பேசிக்
கலந்துகொண்டதில்லை.
மறுவீடு வந்துசென்றபோது
அழுதபோதும்கூட இன்றுபோலவே
என்ன சொல்வதெனத் தெரியாது
திகைத்திருந்தேன் - அவள்
அம்மாவுக்குத்தானே அவளைத் தெரியும்.
அய்யர் வர இன்னும் நேரமிருந்தது.
பங்காளிகள் சீட்டாடிக்
கொண்டிருந்தனர்.
பெண்கள் மறுபடியும் அழ
ஆரம்பித்தார்கள்.
எனக்கும் பூரணிக்கும் இருந்த
இடைவெளியை
சடங்குகள் நிரப்பிக்கொண்டிருந்தன.
எல்லா பனிபொழியும் இரவுகளும்
இனிமையானவைகளல்ல.

No comments: