வரதராஜன் சாரை
சன்னதித் தெரு முனையில்
பெட்டிக்கடையில்தான் சந்தித்தேன்...
அலுமினி சந்திப்புக்கு அவர் வரவில்லை.
வெக்டருக்கும் ஸ்கேலாருக்கும் வித்தியாசம் தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த காலத்தில் திசை காட்டியவர்.
எப்போது ரிடையர் ஆனாரென்று தெரியாது.
மூத்த மகள் யாருடனோ ஓடிவிட்டதாக கேள்விப்பட்டேன்.
அறிமுகப்படுத்திக்கொண்டபோது ஆச்சரியப்பட்டார்.
சந்தோஷப்பட்டது உண்மை போலிருந்தது.
வலிய ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
டீ வாங்கிக் கொடுத்து
கிளம்பும் முன் ஐநூறு ரூபாய் நோட்டுகளில் ஒன்றை அவர் பாக்கெட்டில் வைத்தேன்.
இன்னொரு இருநூறு ரூபாய் இருக்குமா என்றார்.
சில்லறை இல்லையென்றுவிட்டு வந்துவிட்டேன்.
Saturday, October 03, 2020
செல்லாத நோட்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment