Sunday, July 04, 2010

தாழிகள் செய்பவன்

காசி ஒரு வழியாகச் செத்து விட்டான்.
பொதங் கெழமையாடே என
வட்டிக்குப் பணங் கொடுக்கையில்
வாத்தியார் அலுத்துக் கொண்டார்.
கொழுந்தியா மவச் சடங்கில் இருப்பதாகவும்
மறுநாள் வந்துவிடுவதாகவும் வீயேவோ சொன்னார்.
இன்னும் சில பேர் வெளியில் ஒன்றும் சொல்லவில்லை.
தப்படிக்கிறவனையும் உருமி அடிக்கிறவனையும் தவிர
ஊரே காசி மவனைக் கரித்துக் கொண்டிருந்தது.
அதுவரை எங்களூரில்
தொண்டுக் கெழங்கள் எல்லாம்
ஏதோ ஒரு விடுமுறை நாளில்தான்
நல்லெண்ணெய் சொட்டச் சொட்ட
இறந்து கொண்டிருந்தார்கள்.

5 comments:

ராம்ஜி_யாஹூ said...

nice, is there urumi usage still

செல்வ கருப்பையா said...

நன்றி ராம்ஜி, உருமி இன்னும் பயன்படுத்தப் படுகிறது.

பாலா said...

அருமைங்க அய்யா !!
அற்புதமான வெளிப்பாடு சர்வ அலட்சியமாக
இருப்புதெரியாதவர்களின் இழப்புகூட அன்றாட வாழ்வை பாதிப்பதாய் இருப்பது
சாதரணன் களுக்கு கசப்புணர்வை மேலிடச்செயகிறது ...ம்ம்ம் :(

செல்வ கருப்பையா said...

நன்றிகள் பாலா!

MSK / Saravana said...

class dude..