Wednesday, July 07, 2010

இகல் வெல்லுங் கூகை

முதல் மற்றும் கடைசி அறைகள்
உன்னுடையதாக இருக்கட்டும்!
திருப்பித் தாக்க இடங் கொடாதே!
விலாவில் குத்து - வாய்ப்பிருந்தால் முதுகிலும்!
தவறிழைத்து மாட்டிக் கொண்டவன்
திராணி இல்லாதவன் -
மனந் திருந்த விட்டு விடாதே!
வெகுண்டெழு, அச்சம் தவிர், நையப் புடை,
ரௌத்திரம் மட்டும் பழகு!
மனச் சாட்சிகளின் ஒப்புதலோடு
விழித்து விட்ட உன் வன்மங்களுக்கு
இப்படி ஒரு இரை கிடைக்க
இன்னும் சில நாட்கள் ஆகலாம்.

7 comments:

Katz said...

அருமை. யாராவது கிடைச்சா அடி பின்னிடுன்னு சொல்றீங்க

செல்வ கருப்பையா said...

:-) அதே!

Unknown said...

அருமை.அடி பின்னுங்க....

செல்வ கருப்பையா said...

நன்றிங்க...

அது சரி(18185106603874041862) said...

ஆஹா...

உங்களை ரொம்ப நாள் மிஸ் பண்ணிட்டேன்...இப்போ திருப்பி லிஸ்ட்ல போட்டாச்சு...

செல்வ கருப்பையா said...

நன்றிகள் அது சரி!

MSK / Saravana said...

:)

தொடர்ச்சியா எழுதுங்க..