Saturday, June 28, 2008

இருக்கை

முதலில் ஒரே ஒரு
இளம்பெண்.
கண்டிப்பாக உட்கார மாட்டாள்.
ஆமாம், இல்லை.
அடுத்த நிறுத்தத்தில்
பார்ப்போம்.

சில பள்ளி செல்லும்
அல்லது செல்லாத
பதின்பருவ பொறுக்கிகள்.
கட்டாயம் கடைசி இருக்கைதான்.
ஆமாம்.
அடுத்த நிறுத்தத்தில்
பார்ப்போம்.

ஆ, சில இளம்பெண்களுடன்
சில முதியவர்கள்.
சில முதியவர்கள் உட்கார
வாய்ப்பிருக்கிறது.
ஆனால், இல்லை.
அடுத்த நிறுத்தத்தில்
பார்ப்போம்.

சில அலுவலர்கள்.
பார்ப்பது ஆபீஸ் பாய்
வேலை என்றாலும்
கோட்டுக்கு ஒன்றும்
குறைச்சலில்லை.
இவர்களிலும் எவரும்
உட்காரவில்லை.
அடுத்த நிறுத்தத்திலாவது
பார்ப்போம்.

ம்ஹூம்... வாய்ப்பே இல்லை.

இப்படியாக அலுவலகத்தை
அடைந்தேன்.
எனது பக்கத்து இருக்கை
மட்டும் காலியாகவே.

2 comments:

MSK / Saravana said...

விடுங்க.. இதுக்கு போய் வருத்தப்பட்டுகிட்டு..
:)

செல்வ கருப்பையா said...

இந்தக் கவிதை படித்த பெரும்பாலான நண்பர்கள் இதைக் காதல் கவிதையாகவே நினைத்தார்கள். என்னுடைய இந்த blog, நான் தினமும் அலுவலகம் செல்லும் பேருந்தில் எனக்கு ஏற்படும் அனுபவங்களைப் பதிவதற்காக ஆரம்பித்த ஒன்று (ஆனால் பின்னர் திசை மாறிவிட்டது!!!). எடின்பரோவிலும் இதர வெள்ளைக்கார நகரங்களிலும் செல்லும் நம் மக்கள் இதை உணர்ந்திருப்பார்கள் என நினைக்கின்றேன் - வெள்ளைத் துரைமார்கள் மற்றும் துரைசானிகள் வேறு வழியே இல்லை என்றால்தான் நமக்குப் பக்கத்தில் இருக்கும் இருக்கையில் அமர்வார்கள். வெளிப்படையாக இல்லாவிடினும் உள்ளூர இருக்கும் நிற வெறியைக் காட்டவே இதை எழுதினேன் (நம்ம ஆட்கள் இதே போன்று கறுப்பர்களிடம் நடந்து கொள்வதுண்டு!).